திருநெல்வேலி மாவட்டம் டக்கரம்மாள்புரத்தை அடுத்த நாகர்கோவில் பைபாஸ் ரோடு இதயஜோதி நர்சிங் கல்லூரி அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இன்று (ஜன. 08) நடந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.