அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் உள்ள தொழிலதிபர் ராமலிங்கத்திற்கு சொந்தமான ஆர்சிசிஎல் என்ற நிறுவனம், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் இன்றும் சோதனை தொடர்கிறது. நேற்று பூந்தமல்லி, சாத்தங்காடு பகுதியில் உள்ள ஜேஆர் மெட்டல் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியிருந்தது.