சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வோர்ட் முதல் இடத்தில் உள்ளார். இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் சரிவை சந்தித்து 3ஆம் இடத்திற்கு வந்துள்ளார். அதேபோல், ஒருநாள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் முதல் இடத்தில் உள்ளார். இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு இடம் ஏற்றம் கண்டு 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.