2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில், 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது '7ஜி ரெயின்போ காலனி' 2ஆம் பாகம் உருவாக்கி வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவனே 2-ம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா 2-ம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.