தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை மணப்பெண் தாலி கட்டவிடாமல் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், ஹோசதுர்காவில் இச்சம்பவம் நடந்துள்ளது. மஞ்சுநாத் என்ற இளைஞருக்கும் ஐஸ்வர்யா என்பவருக்கும் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் இன்று திருமணம் நடக்கும்போது, மாப்பிள்ளை தாலி கட்டும் நேரத்தில் அப்பெண் திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. மாப்பிள்ளையின் உறவினர்கள் சமாதானப்படுத்த முயன்றும் அப்பெண் சம்மதிக்கவில்லை. மேல்படிப்பு படிப்பதற்காக அப்பெண் திருமணத்தை நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.