DJ வாகனம் மோதி பெண் பலி.. 2 பேர் காயம்..

59பார்த்தது
DJ வாகனம் மோதி பெண் பலி.. 2 பேர் காயம்..
மத்தியப் பிரதேசம் பெதுல் கிராமத்தில் நடந்த திருமண விழாவில் டிஜே வாகனம் மோதியதில் மைனர் பெண் உள்பட இருவர் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து அவர்களை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ரமாரதி (55) என்ற பெண் உயிரிழந்தார். மீதமுள்ள ரேஷ்மா (17) மற்றும் சாந்தா (30) ஆகியோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் டிஜே வாகனத்திற்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி