கட்சியை வலுப்படுத்தும் தவெக.. விஜய்யின் அடுத்த டார்கெட்..

8458பார்த்தது
கட்சியை வலுப்படுத்தும் தவெக.. விஜய்யின் அடுத்த டார்கெட்..
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை தங்களுடைய நிர்வாக வசதிக்காக 110 ஆக பிரித்துள்ளது. அதன்படி, மாவட்டத்திற்கு மூன்று தொகுதிகள் வீதம் பிரிக்கப்பட்டு, 110 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். எந்தவிதக் குற்றப் பின்னணியும் இல்லாத வகையில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொறுப்பாளர்கள் பற்றிய பட்டியல் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி