நாட்டின் ஜிடிபி 7.8% வளர்ச்சி - மோடி புகழாரம்..

65பார்த்தது
நாட்டின் ஜிடிபி 7.8% வளர்ச்சி - மோடி புகழாரம்..
2023-24ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான மொத்த பொருளாதார வளர்ச்சி 8.2 விழுக்காடாக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மோடி தனது ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டார். அதில், “நமது நாட்டின் கடின உழைப்பாளிகளான மக்களுக்கு நன்றி. 2023-24 ஆம் ஆண்டிற்கான 8.2% வளர்ச்சி, உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்துள்ளது. இது வரவிருக்கும் விஷயங்களின் டிரெய்லர் தான்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி