ஒயர் பழுது: மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு தாமதம்

80பார்த்தது
ஒயர் பழுது: மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு தாமதம்
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று (ஜூலை 10) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரம் படி 12.94% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் ஒட்டன்காடுவெட்டி, மாம்பழப்பட்டு, கானை உள்ளிட்ட மூன்று வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒயர் பழுதானதால் வாக்கு செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி