உத்தரப் பிரதேசத்தில், சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று (டிச.1) பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவின் பி.வி.சிந்து, 119-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வூ லூவ் யுவை எதிர்கொண்டார். 47 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-14, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வூ லூவ் யுவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.