சென்னை தலைமைச் செயலகத்தில் ‘தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின்’ கீழ் பயிற்சி பெற்று சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அங்கு, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தவறாக பாடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், “தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?. இதற்காக, உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.