செந்தில் பாலாஜிக்கு சிறைவாசம் முடிவுக்கு வருமா?

59பார்த்தது
செந்தில் பாலாஜிக்கு சிறைவாசம் முடிவுக்கு வருமா?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை ஆகஸ்ட் 14 தீர்ப்பு வழங்க உள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கீழமை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தை அவர் நாடினார். அவரது மேல்முறையீடு மனுவை விசாரித்த, நீதிபதிகள் அபய் ஒகா, ஜார்ஜ் மஸி அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி