மத்திய அரசு சென்னை மெட்ரோ பணிக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டா பதில் அளித்துள்ளார். அதில், “மத்திய அரசு ரூ.63,246 கோடி செலவில் செயல்படுத்தப்படும் சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ நிறுவனம், இதுவரை மத்திய நிதி உதவி குறித்து எந்த கோரிக்கையும் எழுப்பவில்லை” என்றார்.