தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாக ஆகாததால் ஆர்.என்.ரவி மீண்டும் ஆளுநராக தொடர உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உட்பட 2 யூனியன் பிரதேசத்திற்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் நேற்று உத்தரவிட்டார். தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தமிழகத்திற்கான புதிய ஆளுநர் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.