4-வது முறையாக கோப்பையை வெல்லுமா சென்னை அணி?

16624பார்த்தது
4-வது முறையாக கோப்பையை வெல்லுமா சென்னை அணி?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 4-வது முறையாக கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் சென்னை அணி இன்றைய இறுதிப்போட்டியில் களம் காணுகிறது.

ஐபிஎல் 2021 போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று இன்று பைனல் போட்டி நடைபெற உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி 3 முறையும், கொல்கத்தா அணி இரண்டு முறையும் கோப்பையை வென்று உள்ளது. இரண்டு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த போட்டி பயங்கர விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் சென்னை, கொல்கத்தா அணிகள் 26 போட்டிகளில் மோதின. இதில் சென்னை அணி 17 போட்டிகளிலும் கொல்கத்தா 9ல் வென்றுள்ளது. இரு அணிகள் கடைசியாக மோதிய 6 போட்டிகளில் சென்னை 5ல் வெற்றி பெற்றது. கோல்கட்டா 1ல் மட்டும் வென்றது. இதற்கு முன்னர் 2012 இல் சென்னையும் கொல்கத்தாவும் இறுதிப்போட்டியில் மோதிய போது கொல்கத்தாவே கோப்பையை வென்றிருக்கிறது. தோனிக்கு இது பெரும்பாலும் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்பதால் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே வேளையில் சென்னை அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று தமிழக ரசிகர்கள் பெரிதும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

உங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு மிகவும் பிடிக்கும் என்றால் நீங்கள் இந்த விளையாட்டை விளையாடி பார்க்கலாம். அதோடு கிரிக்கெட் விளையாடி, ரூ.10,000 முதல் ரூ.1 கோடி வரை வெல்ல சூப்பர் வாய்ப்பு கிடைக்கும். HALAPLAY APP உங்களுக்கு அந்த அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஆப் மூலம் நீங்கள் பதிவு செய்யும் போது ரூ .100 தள்ளுபடி சலுகையைப் பெறுவீர்கள், ரூ .50 டெபாசிட் செய்யும் போது ரூ .200 BTC & ரூ 250 போனஸ் பணம் கிடைக்கும். நீங்கள் எந்த போட்டியிலும் சேர்ந்து ரூ .1 கோடி வரை வெல்லலாம். அதேநேரம் நீங்கள் ஃப்ரீ லீக்கில் சேர்ந்தால், ஒரு போட்டிக்கு ரூ.10,000 வரை பெறலாம். இப்படி ஏகப்பட்ட பரிசுகள் வெல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. எனவே நீங்கள் உடனே உங்கள் கனவு பேன்டஸி லீக்கில் விளையாடுங்கள். இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து விளையாட கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து, பரிசு மற்றும் பணத்தை வெல்லுங்கள்.

https://halaplay.sng.link/B90ba/ti5f?_dl=https%3A%2F%2Findia.halaplay.com%2Fapp