வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழகம் முழுவதும் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மாவட்டந்தோறும் தவெகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் கலந்து கொள்ள மாட்டார் என தெரிகிறது. தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.