தயிரை சூடாக்குவது அல்லது சமைப்பதினால் அதன் சத்துக்கள் மற்றும் சுவையில் மாற்றம் ஏற்படும் என ஆய்வில் கண்டறியப்பட்டது. தயிரை சூடாக்கும்போது அதில் உள்ள புரதச்சத்துக்கள் சிதைந்து விடும். அதாவது புரதங்கள் விரிவடைந்து அதன் கட்டமைப்பு முற்றிலுமாக மாறி, ஊட்டச்சத்து மதிப்புகளில் மாற்றம் ஏற்படுகிறது. இது போன்ற காரணங்களால் தான் பெரும்பாலும் தயிரை சூடாக்கும் முறை யாருக்கும் பரிந்துரைக்கப்படுவதில்லை.