திருமணம் செய்து கொள்ளாதது ஏன், நடிகை விளக்கம்!

17673பார்த்தது
திருமணம் செய்து கொள்ளாதது ஏன், நடிகை விளக்கம்!
யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த 62 வயதாகும் நடிகை கோவை சரளா தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என கூறியுள்ளார். அதில், "பிறக்கும்போது தனியாகத்தான் பிறக்கிறோம். அதேபோல் இறக்கும்போதும் தனியாகத்தான் இறக்கிறோம். இடையில் இந்த உறவுகள் எனக்கு தேவையில்லை என தோன்றியது. சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்ட பல பெற்றோர்கள் அந்த குழந்தைகளால் கைவிடப்பட்டு இன்று தனியாக வாழ்ந்துவருகிறார்கள். யாரையும் சார்ந்து எனக்கு வாழ பிடிக்கவில்லை" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி