கனமழை: பாலத்தின் அடியில் சிக்கிய பேருந்து

79பார்த்தது
கனமழை: பாலத்தின் அடியில் சிக்கிய பேருந்து
தமிழகத்தில் பல இடங்களில் இன்று கனமழை வெளுத்துவங்கும் என வானிலை மையம் தெரிவித்த நிலையில், நெல்லையில் ஒரு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக வள்ளியூரில் இருந்து ராதாபுரம் செல்லக்கூடிய பகுதியில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் மழைநீர் அதிகப்படியாக தேங்கியது. அப்போது வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் சென்ற பேருந்து மழைநீரில் சிக்கிக் கொண்டது. உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் படையிர் பேருந்தில் சிக்கிக்கொண்ட 40 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்தி