ஸ்லோவாக்யா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு (வீடியோ)

13001பார்த்தது
ஸ்லோவாக்யா பிரதமர் ராபர்ட் பிகோ மீது மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹேண்ட்லோவா என்ற இடத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராபர்ட் பிகோ காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரை கொல்ல இந்த முயற்சி நடந்துள்ளது. பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடித்த போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி