தாமதமான திருமணம் என்பது இன்று சமூகத்தில் பலராலும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாகவே மாறிவிட்டது. திருமணம் தாமதம் ஆவதற்கான பொதுவான காரணங்கள் உள்ளன. திருமண பந்தத்தில் இணையும் ஆண் பெண் இருவருக்குமே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது முக்கிய காரணம். அதேபோல குடும்ப பொறுப்பு, பொருளாதார வசதிகளும் குறிப்பிடத்தக்க காரணமாக உள்ளன. சமீப வருடங்களாக புதிய உறவுக்குள் செல்வதற்கு மனரீதியான பயம் அதிகரித்து வருகிறது.