குழந்தை அதிகமாக அழுவது ஏன்?

67பார்த்தது
குழந்தை அதிகமாக அழுவது ஏன்?
குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மை தான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் குழந்தை அழக்கூடும். பசிக்கு அடுத்தபடியாகத் தாகம் எடுத்தால் குழந்தை அழும். அதிகக் கனமான ஆடைகள், உறுத்துகிற ஆடைகள் மற்றும் கால் கொலுசு, கழுத்து செயின், இடுப்பு ஆபரணங்கள் ஆகியவற்றாலும் குழந்தை அடிக்கடி அழலாம்.

தன்னுடைய உடலில் ஏதேனும் பூச்சிகள் ஊர்வது, கடிப்பது போல் உணர்ந்தால் அப்போதும் குழந்தை அழலாம். சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி, வயிற்று வலி, காது வலி போன்ற காரணங்களாலும் குழந்தை அழக்கூடும்.

தொடர்புடைய செய்தி