தொண்டையில் உள்ள தசைகள் தளர்வடைந்து மூச்சுக்குழாயின் உள் சுற்றளவு குறைகிறது. இதனால் பலரும் வாய் வழியாக சுவாசிக்க தொடங்குகின்றனர். இதுவே குறட்டை என அழைக்கப்படுகிறது. மரபணு, உடல் பருமன், சளி, ஒவ்வாமை, மூக்கடைப்பு, சிறிய தாடை, தொண்டை சதை போன்றவற்றாலும் குறட்டை ஏற்படலாம். குறட்டை அதிகம் வருபவர்கள் பக்கவாட்டில் படுத்து தூங்க முயற்சி செய்யலாம். உயரமான தலையணையை பயன்படுத்தலாம். இது ஒரு கவலைக்குரிய பிரச்சனையாகும். எனவே மருத்துவரை அணுகி தீர்வு காணலாம்.