1962 இந்திய சுங்கச் சட்டத்தின்படி சர்வதேச பயணிகள் ரூ.50,000 மதிப்புள்ள பொருட்களை வரியின்றி கொண்டு வரலாம். வெளிநாட்டில் வசிக்கும் இந்திய பயணி என்றால் 20 கிராம் வரை நகைகளை வரியில்லாமல் எடுத்துச் செல்லலாம். ஆண் ரூ.50,000 மதிப்பு நகைகளும், பெண் என்றால் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளும் எடுத்துச் செல்லலாம். இந்தியாவிற்கு ஒரு கிலோவிற்கு மேல் தங்கம் கொண்டு வந்தால் தங்கத்தின் விலையில் 36.05% சுங்க வரியாக செலுத்த வேண்டும்.