தாய்லாந்தைச் சேர்ந்த கிங்காங் உலகில் மிக உயரமான எருமைக்கான கின்னஸ் சாதனையை பெற்றுள்ளது. ஐந்து வயதுடைய இந்த எருமை 6.08 அங்குலம் உயரத்தை எட்டியுள்ளது. இது சராசரியை விட 20 அங்குலம் அதிகமாகும். இந்த எருமைக்கு நாள்தோறும் 35 கிலோ உணவு வழங்கப்படுகிறது. வைக்கோல் மற்றும் சோளத்தை விரும்பி சாப்பிடுவதாக அதன் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். பெரிய உருவம் கொண்ட போதிலும் மென்மையான நடத்தையை கொண்டதாக கிங்காங் விளங்கி வருகிறது.