நீலகிரி மாவட்டம் கூடலூர் தவளமலை பகுதியில் பள்ளத்தில் உருண்டோடிய வேன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் காயம் அடைந்துள்ளனர். பெருந்துறையில் இருந்து உதகை வழியாக கூடலூர் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. வேனில் சிக்கியவர்களை கயிறு மூலம் மீட்டு தீயணைப்பு துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருமண நிச்சயத்திற்காக சென்ற போது, இந்த விபத்து நிகழ்ந்தததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.