விவசாயப்பணிகள் செய்ய வயலில் இறங்கினால் சேற்றில் நமது கால்கள் புதைந்து போவதை காணமுடியும். ஆனால் அதிக எடை கொண்ட பெரிய டிராக்டரின் டயர் அந்த சேற்றில் பதிவதில்லை. அது ஏன் தெரியுமா? மனிதர்களாகிய நாம் நிற்கும் போதும் நடக்கும் போதும் நமது உடல் எடை முழுவதும் நமது கால்களில் தான் செலுத்தப்படும். ஆனால் வட்டவடிவில் பெரியதாக உள்ள டிராக்டர் ஒரே இடத்தில் குவியாமல் பரவிக்கிடப்பதால் டயர் சேற்றில் பதிவதில்லை.