அமைச்சர் கொடுத்த காசோலையை தூக்கியெறிந்த உறவினர்கள்

78பார்த்தது
விக்கிரவாண்டியில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமி லியா லட்சுமி (4) குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், சிறுமியின் இல்லத்திற்கு நேரடியாக வந்த அமைச்சர் பொன்முடி சிறுமியின் பெற்றோரிடம் அந்த காசோலையை கொடுத்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். அவர் அங்கிருந்து திரும்பியவுடன் சிறுமியின் உறவினர்கள் அந்த காசோலையை அங்குமிங்கும் தூக்கியெறிந்தனர். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி