துன்பத்தை தருபவர்களை ஏன் அடுத்தடுத்து தேர்வு செய்கிறார்கள் - சீமான்

34081பார்த்தது
துன்பத்தை தருபவர்களை ஏன் அடுத்தடுத்து தேர்வு செய்கிறார்கள் - சீமான்
துன்பத்தை தருபவர்களை ஏன் அடுத்தடுத்து மக்கள் தேர்வு செய்கிறார்கள் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னை எண்ணூரில் மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்த பின் பேட்டியளித்த அவர், இரு திராவிட கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகிறார்களே தவிர மழைநீர் வடிகால் அமைக்க எந்தவொரு அடிப்படையான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. துன்பத்தை தருபவர்களையே மக்கள் ஏன் அடுத்தடுத்து தேர்வு செய்கிறார்கள் என தெரியவில்லை. சென்னையில் அடிப்படை கட்டமைப்பே இல்லை. சென்னையே ஒரு ஏரி நகரம். அதனை தூர்வாரிவிட்டு ஏரியாவாக மாற்றினால் எப்படி..? பள்ளிக்கரணை போன்ற இயற்கையின் கொடையை யாராவது குப்பை மேடு ஆக்குவார்களா? என்றும் ஆதங்கம் தெரிவித்தார்.