சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் பாலாஜி என்ற மருத்துவரை, 25 வயது இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் டிப்ளமோ படித்துள்ளார் என விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். பெருங்களத்தூரில் உள்ள விக்னேஷின் வீடு தற்போது பூட்டப்பட்டுள்ளது. விக்னேஷின் தந்தை மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.