ரத்த தானம் செய்பவர்கள் தானம் செய்வதற்கு முன்பாக விரதம் இருத்தல் கூடாது. குறைந்தபட்சம் 4 மணி நேரத்திற்கு முன் உணவு சாப்பிட்டிருக்க வேண்டும். ரத்தம் கொடுப்பதற்கு முன் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். அதேபோல இரும்புச்சத்து மிக்க கீரைகள், மீன், முட்டை, காய்கறிகள், சிக்கன் ஆகியவற்றை உண்ணலாம். ரத்த தானத்திற்கு பின்னர் உணவில் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழச்சாறுகளை அதிகம் அருந்தலாம்.