இந்திய இளம் வாடிக்கையாளர்களின் முதன்மை தேர்வாக 'விஸ்கி' வகை மதுபானம் உருவெடுத்துள்ளதாக "Allied Blenders and Distillers Ltd" என்ற தனியார் நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இதுதொடர்பாக அந்நிறுவனம், இந்தியாவின் மொத்த மதுபான சந்தையில் ஏறக்குறைய 64% பங்கை கொண்டுள்ள விஸ்கி சந்தை, வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும் 2023-24 நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்த விஸ்கி விற்பனை சந்தனை, 2028-29 நிதியாண்டில் ரூ.2.4 லட்சம் கோடி வரை எட்டும் எனவும் கணித்துள்ளது.