வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என வங்கதேசத்தில் ஆட்சி அமைத்துள்ள இடைக்கால அரசு கைவிரித்துள்ளது. இதுகுறித்து இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் தொஹித் ஹொசைன், "உள்நாட்டு போராட்டங்களால் பதவியில் இருந்து விலகி, நாட்டை விட்டு தப்பிய ஷேக் ஹசீனா தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்தியா மற்றும் ஐக்கிய அமீர அரசிடம் கேட்ட போதும், உரிய பதில்கள் கிடைக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.