தொகுதி மறுவரையறை முதல்முறையாக 1952-ல் நடைபெற்றது. அப்போது 489 தொகுதிகள் இருந்தன. 1963-ல் 2-வது முறையாக தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. அப்போது தொகுதிகளின் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்தது. இறுதியாக 1973-ம் ஆண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டபோது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக அதிகரித்தது. 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது மீண்டும் தொகுதி மறுவரையறை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.