ரூ.2,500 லஞ்சம் கேட்ட எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

53பார்த்தது
ரூ.2,500 லஞ்சம் கேட்ட எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
சேலம்: தலைவாசல் இலுப்பநத்தத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் அரசு மது பாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார். இவர் வீரகனூர் காவல் நிலைய எஸ்.ஐ. கருப்பண்ணனிடம் போனில் பேசும் வீடியோ வெளியாகி வைரலானது. அதில் 30 பாட்டில்கள் மட்டும் ஓடுவதால் கட்டுபடியாகவில்லை, ரூ.1,500 கொடுப்பதாக கூறுகிறார். மறுமுனையில் பேசும் எஸ்.ஐ. கருப்பண்ணன் ரூ.2,500 பணம் வேண்டும் என கேட்கிறார். இந்த ஆதாரத்தின் படி, சேலம் எஸ்.பி. கௌதம் கோயல், எஸ்.ஜ. கருப்பண்ணன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி