நடுரோட்டில் தீக்கிரையான ஆடி கார் (வீடியோ)

59பார்த்தது
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் சாலை ஆயிரப்பேரி விலக்கு பகுதியில் இன்று (மார்ச் 02) அதிகாலையில் ஆடி கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த தென்காசி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். கார் தீ பிடித்து எரிந்தது குறித்து குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி