10 ஆண்டுகளுக்குப் பிறகு 1 கோடியின் மதிப்பு என்ன?

63பார்த்தது
10 ஆண்டுகளுக்குப் பிறகு 1 கோடியின் மதிப்பு என்ன?
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரூ. 100-ன் மதிப்பு தற்போது குறைந்துள்ளது. 1 கோடி ரூபாய் கையில் இருந்தால் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்று பலர் நினைக்கலாம். ஆனால், தற்போதுள்ள ரூ.1 கோடிக்கு இருக்கும் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் இருக்காது என நிதிநிலை ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் மதிப்பு இப்போது இருப்பதை விட அதிகமாக இருந்தது. அதிகரித்து வரும் பணவீக்கம் காலப்போக்கில் பல்வேறு பொருட்களின் விலையை அதிகரித்து விடுகிறது. இதனால் பணத்தின் மதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. எந்த முதலீட்டின் வருமானமும் முதலீட்டை விட அதிகமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அதிக லாபம் தராது. பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால், எதிர்காலத்தில் பெரிய வருமானத்தைப் பெறக்கூடிய வகையில் முதலீடு செய்ய வேண்டும். இப்போது ரூ.1 கோடிக்கு வாங்கப்படும் பொருட்களின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கும். எதிர்காலத்தில் 1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய பொருளின் விலை 1.79 கோடி ரூபாயாக மாறலாம் என மதிப்பிடப்படுகிறது.

தொடர்புடைய செய்தி