தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்லும் முதலமைச்சர்

83பார்த்தது
தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்லும் முதலமைச்சர்
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர், ஆண்டுக்கு 10 லட்சம் என்ற அடிப்படையில், 31 லட்சம் வேலைவாய்ப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். விரைவில் 50வது சிப்காட் பூங்காவை முதலமைச்சர் தொடங்கி வைப்பார். தஞ்சையில் பாமாயில் உற்பத்தி தொழிற்சாலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் 60% உறுதி செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி