பட்ஜெட் விலையில் கலக்க வருகிறது CMF Phone 1

67பார்த்தது
பட்ஜெட் விலையில் கலக்க வருகிறது CMF Phone 1
நத்திங் நிறுவனத்தைப் போலவே CMF பிராண்டும் புதுமையான டிசைன் உடன் சந்தையில் களமிறங்கி இளம் தலைமுறையினரை ஈர்க்கும் முயற்சியில் உள்ளது. ஜூலை 8ஆம் தேதி இந்தியா மற்றும் உலக சந்தைகளில் அறிமுகமாக உள்ள இந்த ஸ்மார்ட்ஃபோன்களின் விலை தற்போது கசிந்துள்ளது. தற்போது கசிந்துள்ள தகவல்களின் படி, 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட CMF Phone 1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 ஆக இருக்கக்கூடும். மேலும், 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விலை ரூ.17,999 ஆக இருக்கும் எனத் தகவல். இருப்பினும், இந்த விலைகள் அனைத்து வங்கி தள்ளுபடிகளையும் உள்ளடக்கியதாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி