உடல் ஆரோக்கியத்திற்கு தினசரி போதுமான அளவு தூக்கம் மிக அவசியம். நள்ளிரவில் தாமதமாக தூங்கும் பழக்கத்தை பலரும் கொண்டுள்ளனர். தாமதமாக தூங்கும் வழக்கத்தை உடையவர்கள் தங்கள் வழக்கத்தை மாற்றி சீக்கிரம் தூங்க செல்வது மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் சில வகை கேன்சர் பிரச்சனைகளுக்கும் போதுமான அளவு தூங்காமல் இருப்பதற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.