ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸ் வெளியாகுவதற்கு முன்பு, ஐபோன் 17 சீரிஸின் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17 ஸ்லிம் வகைகளில் 8 ஜிபி ரேம் கொண்ட ஏ18 அல்லது ஏ19 பயோனிக் சிப்செட் உடன் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆனது 12 GB ரேம் மற்றும் A19 ப்ரோ சிப்செட் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17 சீரிஸில் 24 எம்பி முன்பக்க கேமரா வரயிருப்பதாகவும் கூறப்படுகிறது.