சீனாவில் ஒட்டுண்ணிகளால் பரவும் வெட்லேண்ட் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகளில் இருந்து மனிதர்களை பாதிக்கும் இந்த வைரஸை ஆய்வகத்தில் எலிகளின் மீது சோதனை நடத்தியுள்ளனர். அப்போது எலிகளில் மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் மனிதர்களுக்கு இது பரவும் பொழுது உயிருக்கு ஆபத்தான தொற்று நோய்களை ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.