எக்காரணத்தை கொண்டும் திமுக கூட்டணியில் இருந்து விலக மாட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் உரையாற்றிய திருமாவளவன், "திமுகவை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்று எண்ணும் பாசிச சக்திகள் என்னை ஒரு தூதாக பயன்படுத்தி அதை நிறைவேற்றி விட வேண்டும் என நினைக்கிறார்கள். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே போட்டியிடுவோம்" என்று கூறியுள்ளார்.