ரேஸில் வெற்றி... குழந்தைப் போல் துள்ளிக் குதித்த அஜித்தின் வீடியோ

62பார்த்தது
துபாய் 24H கார் ரேஸில் போர்ஷே 992 கப் கார் பிரிவில் (எண் 901) நடிகர் அஜித்குமாரின் அணி 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. அவரது அணி 24 மணி நேரத்தில் 567 லேப்களை கடந்து வெற்றி வாகை சூடியது. இந்நிலையில், தனது அணி வெற்றி பெற்றதையடுத்து உரிமையாளரான அஜித் மைதானத்தை நோக்கி குழந்தை போல் துள்ளிக் குதித்து ஓடிவந்தார். பின்னர் அவர் இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி