மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம்

50பார்த்தது
மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம்
கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலை சந்திக்கவில்லை, மக்களை நம்பி நிற்கிறோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் சொந்தக்காலில் நின்று வெற்றி பெறக்கூடிய சக்தி வாய்ந்த கட்சி அதிமுக. அதிமுக தொடர்ந்து போராடியதால் தான் மகளிர் உரிமை தொகையை வழங்கியது திமுக. இந்தியா கூட்டணி பலவீனமாக இருப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான் காரணம் என கூறியுள்ளார். கூட்டணியில் இருக்கும் வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம்
தற்போது பாஜக மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வந்தால் முறியடிப்போம். அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவர் என அரியலூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் இபிஎஸ் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி