கோயம்புத்தூர், தருமபுரி, நீலகிரி ஆகிய மாவட்ட விவசாயிகள், தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் எதிர்பாராத நஷ்டங்களைச் சந்தித்து இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். ஆகையால் தக்காளி, வெங்காயத்தின் விலை ஏற்றத்தாழ்வுகளால் விவசாயிகள் பாதிக்காமல் இருக்க, அரசே குறைந்தபட்ச விலை நிர்ணயித்து, ஒப்பந்த சாகுபடிக்கு வகை செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.