வயநாட்டில் இன்று (ஜூலை 30) அதிகாலை முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1000 பேர் சிக்கி தவித்து வருகின்றனர். மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை முதல் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.