வயநாடு நிலச்சரிவு நிவாரண உதவித் தொகையாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி அறிவித்துள்ளார். கடந்த ஜூலை 30-ம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, கேரள மாநிலத்திற்கு பல்வேறு தரப்பினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இந்நிலையில், கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி வழங்க உள்ளார்.