வயநாடு நிலச்சரிவு- சிறுவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்

57பார்த்தது
வயநாடு நிலச்சரிவு- சிறுவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்
கேரளாவை சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் ரையான் என்ற சிறுவன் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எழுதிய கடிதம் இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கடிதத்தில், “அன்புள்ள இந்திய ராணுவமே, எனது அன்புக்குரிய வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி, பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை நீங்கள் மீட்பதைக் கண்டு நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன். நீங்கள் ஒரு பாலம் கட்டிய காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. நானும் ஒரு நாள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து என் தேசத்தை பாதுகாக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி