அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பின்போது, மக்களின் அடிப்படைத் தேவைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் விலைவாசி உயர்வு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.